Sunday, April 26, 2020



மனிதர்களுக்கும் பச்சைரத்தம்!!


நமது மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சில சமயங்களில் நமது சிவப்பு நிற ரத்தம் பச்சையாக மாறும் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? ஆம், என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக, மனித ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் (heamoglobin) என்ற புரதத்தில் இருக்கும் இரும்பு அணுக்கள் தான் நமது ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. ஆனால், கந்தக மூலக்கூறுகள் (sulphur) உள்ள சில மருந்துகளை உட்கொள்ளும் போது, அது நம் சிவப்பு ரத்த மூலக்கூறுகளில் உள்ள இரும்புடன் வினைப்புரிந்து கந்தக ஏற்ற ஹூமோகுளோபிநாக (Sulfhemoglobin) மாறுகிறது. இவ்வாராக மாறிய ரத்த அணுக்களால் பிராணவாயை (oxygen) கடத்த முடியாது. இந்த நிலை நீடித்தால் உடலில் இருக்கும் உறுப்புகள் பிராணவாயு இல்லாமல் சிதைய தொடங்கி உயிருக்கே ஆபத்தாக முடியும். ஆனால், இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், குணமாக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுவரை உலக அளவில் சிலர் மலச்சிக்கல், சிறுநீர் பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளுக்காக சல்பர் உள்ள மருந்துகளை தவறான அளவுகளில் உட்கொண்டதால் சல்ப்ஹீமோகுளோபினெமியா (sulfhemoglobinemia) நோயினால் பாதிக்கப்பட்டு சரியான தருணத்தில் மருத்துவ உதவியை நாடியதால் உயிர்காக்கப்பட்டனர்.

ஆகவே, அடுத்த முறை உடம்பு சரியில்லாதபோது தாமாகவே மருந்துகளை வாங்கி உண்ணாமல் சரியான மருத்துவ உதவியை நாடவும்.